திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி. மேட்டூரைச் சேர்ந்த மேரி என்பவர் முதுமை காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது பேரன் சதிஸ் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால், இறுதிச் சடங்கில் பங்கேற்க பிணையில் வெளியே வர தேவையான ஆவணத்தில் கிராம நிர்வாக அலுவலரான சின்னத்தம்பியிடம் கையெழுத்து பெற குடும்பத்தினர் சென்றுள்ளனர். trichy அப்போது, கிராம நிர்வாக அலுவலர் சின்னத்தம்பி மது போதையில் இருந்ததால் கையெழுத்து வழங்க முடியாத நிலையில் சின்னத்தம்பி இருந்துள்ளார் இதன் காரணமாக பேரன் சதிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சின்னத்தம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/trichy-vao-in-drunken-mode-during-dhty-time




