சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை மாற்றம் கண்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,400-க்கும் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/todays-gold-price-status-04072026




