நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விஜய் 'இந்தியா டுடே - சி வோட்டர்' இணைந்து நடத்திய சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் வெளியாகி உள்ளன. இதில் 2024-ல் தீவிர அரசியலில் களமிறங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பிரபல பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்துள்ளார். இந்தக் கருத்துக் கணிப்புப் பட்டியலில் திரிணமுல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி 2% வாக்குகளுடனும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 1.7% வாக்குகளுடனும் விஜய்க்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், 'காஃக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மூலம் புகழ்பெற்ற வளர்ந்து வரும் இளம் தலைவர் அபிஜீத் திப்கே 1.3% வாக்குகளைப் பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் 1.2% வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. சட்டமன்றம்: ``முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-has-secured-third-place-in-the-opinion-poll-regarding-who-the-next-prime-minister-should-be




