நகோயா, 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ரியூனோசுகே சுகுவேவை எதிர்கொண்ட அபய் சிங், தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார் அபாரமாக விளையாடிய அபய் சிங், தனது எதிராளிக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் 11-4, 11-3, 11-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜப்பான் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் அபய் சிங் இந்தியாவுக்கு ஸ்குவாஷில் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அடுத்த சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் அனாஹத் சிங் அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-squash-indian-player-abhay-singh-advances-to-the-semi-finals




