நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வைரலானது. இந்த நிலையில், சென்னையில் சிக்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், என்னோட அம்மாவுக்கு நன்றி.என்னோட அப்பா இன்னைக்கு முதல் அமைச்சர்.அவருக்கு நன்றி. என்னோட தங்கை திவ்யா சாஷா அவளுக்கும் ரொம்ப நன்றி” என்றார். ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய்க்கு நன்றி தெரிவித்தபோது ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/thanks-to-my-mom-and-dad-jason-sanjay-speaks-at-the-sigma-audio-launch-event




