திருவனந்தபுரம், சுற்றுலா மையமாக விளங்கும் கவிக்கு பத்தனம்திட்டாவில் இருந்து கேரள அரசு பஸ் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை பத்தனம்திட்டாவில் இருந்து கவிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 58 பேர் இருந்தனர். காட்டு தேனீ கூட்டம் அந்த பஸ் வண்டிப்பெரியார் வள்ள கடவுக்கு அருகே கோழிக்கானத்தில் பெரியார் புலிகள் சரணாலயம் அருகே வந்த போது எதிரே வந்த காருக்கு இடம் கொடுப் பதற்காக பஸ் இடது பக்கமாக ஒதுங்கியபோது சாலையோரம் இருந்த மரக்கிளையில் லேசாக உரசியது. இதையடுத்து அந்த மரக்கிளையில் இருந்த காட்டு தேனீ கூட்டம் கலைந்து பஸ்சுக்குள் பாய்ந்து பயணிகளை தாக்க தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் பஸ்சின் பக்கவாட்டு ஜன்னலை மூடினர். சிகிச்சை அப்போது புலிக்கூண்டில் சிக்கிய எலியை போல் மாட்டிக் கொண்ட பயணிகள் பஸ்சின் கதவை திறந்து அலறியடித்துக்கொண்டு சாலையில் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் தேனீக்கள் விடாமல் அவர்களை துரத்தி சென்று கொட்டியது. இதில் காயம் அடைந்த அய்யப்ப பக்தர்கள், டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வனத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/17-people-were-injured-after-being-stung-by-wild-bees-on-a-moving-bus-near-pathanamthitta




