திருப்பதி, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ காலத்தில கருடை சேவைக்காக தமிழகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதில் சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன்படி திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று தொடங்கியுள்ளது. பாரிமுனையில் தொடங்கிய திருக்கொடை ஊர்வலம், என்.எஸ்.சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மண்டபம், வால்டாக் சாலை வழியாக செல்கிறது. மாலை 4 மணிக்கு பிரசித்தி பெற்ற அந்த கவுனி தாண்டுதல் நிகழ்வு என்பது நடைபெற இருக்கிறது. இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் இந்த திருக்குடைகள் அனைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டு, அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் வழியாக திருக்குடைகள் ஊரோலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பின்னர் 18-ந்தேதி காலை திருமலை சென்றடையக்கூடிய வகையில் பயண நிகழ்வு வரையறுக்கப்பட்டுள்ளது. 18-ந்தேதி காலை திருமலை சென்ற பிறகு அங்கு மாட வீதியில வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களோடு, திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை திருக்குடை ஊர்வலம் என்பது ஒரு பிரசித்தி பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக இந்த திருக்குடை ஊர்வல நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாகும். திருப்பதி திருக்குடை ஊரவலத்தையொட்டி வால்டாக் சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-grandly-flagged-off-in-chennai




