காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சிசிடிவி கேமரா-க்களில் தங்களின் முகம் தெரியாமலிருக்க ஸ்பிரே பெயிண்ட்டை அந்தக் கும்பல் அடித்திருக்கிறது. மேலும் கொள்ளை நடக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரத்தின் இணைப்பையும் அந்தக் கும்பல் துண்டித்திருக்கிறது. இன்று காலை (25.8.2026) ஏ.டி.எம் மையத்துக்கு பணம் எடுக்க சென்ற ஒருவர்தான் கொள்ளை நடந்த தகவலை தெரிவித்திருக்கிறார். உடைக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம் இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிந்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், கொள்ளை எப்படி நடந்தது என ஆய்வு செய்தனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கும்பல், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்மில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவில்லை. வங்கி அதிகாரிகளின் ஆய்வுக்குப பிறகுதான் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/atm-theft-in-kanchipuram



