வால்பாறை, வால்பாறையில் தாயின் கண்முன், வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுவனை, சிறுத்தை கவ்விச் செல்ல முயன்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் குருசாமி. இவருடைய மனைவி நாகஜோதி. இவர்களுடைய மகன் தீட்சிதன் (வயது 5). இவன் அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுத்தை தீட்சிதன் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தான். அதை அவனுடைய தாய் நாகஜோதி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்குள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்து சிறுவனின் தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற தொழிலாளி ஓடிவந்தார். இதற்கிடையே சிறுத்தை வேகமாக வந்த சிறுவன் தீட்சிதனை கடிக்க தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் கூச்சல் போட்டான். அப்போது சிறுத்தை, சிறுவனின் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்றது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிகிச்சை இதனால் பதற்றம் அடைந்த நாகஜோதி மற்றும் ரமேஷ் ஆகியோர் கூச்சல் போட்டனர். இதன் காரணமாக சிறுத்தை, தீட்சிதனை விட்டு விட்டு புதர் செடிகளுக்குள் ஓடி மறைந்தது. இதைத்தொடர்ந்து தலையில் படுகாயம் அடைந்த தீட்சிதனை மீட்டு அய்யர்பாடி எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த பிறகு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு வால்பாறை வனத் துறையினர் மற்றும் வட்டார கல்வி அதிகாரி செல்வி ஆகியோர் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அங்கு சிகிச்சை அளித்த போதும் சிறுவனின் காது மற்றும் தலையில் இருந்து ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. எனவே அய்யர் பாடி எஸ்டேட் நிர்வாகத்தினர் சிறுவனை தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எச்சரிக்கை இதைத்தொடர்ந்து வனச்சரக அதிகாரி சுரேஷ் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மனித - வனவிலங்குகள் மோதல் தடுப்பு படையினர் சம்பவம் நடந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குழந்தைகளை தனியாக வெளியே விளையாட விடவேண்டாம். குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள புதர் செடிகளை எஸ்டேட் நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/valparai-leopard-attempts-to-snatch-a-boy-playing-outside-his-home




