புதுடெல்லி தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறிய பின்பு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் தேர்வு சீர்திருத்த மசோதா, 2026 மீது இன்று மீண்டும் விவாதம் நடைபெற்றது. எனினும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும் மேகதாது விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதா நிறைவேற்றம் இதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை 2 மணியளவில் கூடியது. இதில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது. தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறிய பின்பு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சிறை தண்டனை இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு ஒரு தெளிவான சட்ட ரீதியிலான பதில் கிடைத்து உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை எடுத்து கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்கள் கண்டறியப்பட்டால், அவருக்கு ரூ.50 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வினாத்தாள் கசிவில் ஈடுபட கூடிய அமைப்புகள் கண்டறியப்பட்டால் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/untitled-jul-29-2026-0419-pm




