Articolo completo
சட்டமன்றத்திற்குள் குட்டி ஸ்டோரி; ஸ்டாலினை சாடிய முதல்வர் விஜய் முதல்வர் விஜய் முதல்வர் விஜய், ``எனக்கு ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. " ஒரு ஊர்ல பெரியவர் ஒருத்தர் ரொம்ப வெளியில் அடிக்குது'னு கண்ணுக்கு மேல கை வச்சு சுத்திக்கிட்டு இருந்தாராம். கூட இருந்த சின்ன பையன் என்ன வேண்டும், என்ன தேடிட்டு இருக்கிங்க'ன்னு கேட்டானாம். அது ஒன்னும் இல்ல தம்பி உங்க அப்பா இங்க இருக்காரு'ன்னு சொன்னாங்க அவரை தான் தேடிட்டு இருக்கேன். எங்க அவரை காணோம் அப்படின்னு கேட்ருக்காரு" எங்களுக்கும் இந்த மாதிரி சம்பந்தம் இல்லாத கதையெல்லாம் பேச தெரியும். தப்பா எடுத்துகாதீங்க கதையில அந்த பெரியவர் அப்படி கேட்டிருக்கிறார். அதனால் யாரும் இங்கு டென்ஷன் ஆக வேண்டாம். பேசு பேசு என்கின்றனர். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" என்று சட்டமன்றத்திற்குள்ளும் குட்டி ஸ்டோரி சொல்லி ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருக்கிறார். முதல்வர் விஜய், ``நம் மீது அவதூறு பரப்பியது மட்டும் அல்லாமல், மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் நமக்கு ஓட்டுபோட்டது தப்பாம். 50 வருஷமா ஒரே டெனிக்கா? டெக்னிக்கை மாற்றுங்கள். பிறகு அது என்ன சொன்னீங்க... சோஃபா மாடல் ஆட்சியா? அது புரியவே எனக்கு லேட் ஆகிவிட்டது. பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ண சொல்லுங்கள். சட்டசபைக்குள் வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்." என்றார். ``பேசு பேசு என்கின்றனர். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது."- விஜய் திமுக வெளிநடப்புக்கு பிறகு பேசிய முதல்வர் விஜய், " சமூகநிதி அரசு என்று சொன்னவர்களைப் பார்த்து கேட்கிறேன். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள். ஆனால் நம்முடைய அரசில் எட்டு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம். அம்பேத்கரின் 100 ஆண்டு கால கனவு நிறைவேறி இருக்கிறது. எங்கள் அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம். அதனால் மக்களால் அகற்றப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம், ஊழலே செய்ய மாட்டோம். தப்பே செய்ய மட்டோம் என்று சொல்வதால் தான் கூட்டணி ஆட்சி அமைக்க முன்வருகிறோம். ஆட்சியிலும் பங்கும். அதிகாரத்திலும் பங்கு என்பதை கொடுக்க முன்வருகிறோம். ஊழலால் ஊறிபோனவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கொடுக்க முன்வர மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதே மக்கள் தான் இப்போது அவர்களை பார்த்து சிரிக்கிறார்கள்" என்றார். முதல்வர் விஜய் தொடர்ந்து, ``சட்டமன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு படத்திறப்பின்போது தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது. அப்போ என்ன பண்ணிட்டு இருந்தீங்க..? அதற்கு ஆதாரம் இருக்கு.(என புத்தகத்தை காட்டினார்) பேசு பேசு என்கின்றனர். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது." என்றார். `முதல்வர் பேசும்போது சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை' - உதயநிதி ஸ்டாலின் "முதல்வர் ஏன் பேசவில்லை என்கிறீர்கள். பேச ஆரம்பித்தவுடன் குறுக்கிடுகிறீர்கள்"- ஆதவ் அர்ஜூனா எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, "நேற்று நான் பேசும்போது அமைச்சர்கள் எழுந்து பேசினார்கள். நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். ஆனால் இன்று முதல்வர் பேசும்போது சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. அதனை கேட்க எங்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல நேற்று நீங்கள் அவை முடிந்துவிட்டது என்று சொன்னீர்கள். நாங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஒரு அமைச்சர் இங்கே தனியே பேசிக்கொண்டிருக்கிறார்" என்றார். முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு. `அந்த குறிப்பிட்ட சொல் அவைக்குறிப்பில் ஏறாது' அமைச்சர் ராஜ்மோகன் - தவெக முதல்வரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், "எதிர்கட்சியினர் ஒருமையில் எங்களை அழைகின்றனர். அவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது அதை மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சொல் அவைக்குறிப்பில் ஏறாது என சபாநாயகர் குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் ராஜ்மோகன், ``பாசிசம் என்ற வார்த்தையை கேட்டு அவர்கள் கோபம் அடைகின்றனர். ஆனால் நேற்று அவர்கள் சோஃபா மாடல், குதிரை பேரம் என்றார்கள். எங்கள் முதல்வரின் வழிகாட்டுதலால் சகிப்பு தன்மையுடன் இருந்தோம்" என்றார், `டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்தனர்' முதல்வர் விஜய், ``எனக்கும் எங்களது அமைச்சருக்கும் எதுவும் தெரியாது என்று பேசுகின்றனர். அரசியல் ரீதியான கொள்கையிலும் மாநில உரிமையிலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கொண்டவர்கள் நாம். முதல்வர் விஜய் நீட் தேர்வு கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 10 மாத காலம் டிஜிபியே இல்லாமல் இருந்தது. தவெக ஆட்சியில் டிஜிபி நியமனம் செய்யபட்டார். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்தனர். அதெல்லாம் தற்போது இல்லை." என்றார். `கடந்தகால நிர்வாகக் குளறுபடியே மின்வெட்டுக்கு காரணம்' - முதல்வர் விஜய் முதல்வர் விஜய், ``நாம் யாருடைய டீமும் அல்ல. நாம் மக்கள் டீம். கோயில் பணத்தை கொள்ளையடிக்கத் தெரியாது. கனிமவளங்களைக் கொள்ளையடிக்கத் தெரியாது. பணி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்துக்கு பணம் வாங்கத் தெரியாது. கடந்தகால நிர்வாகக் குளறுபடியே மின்வெட்டுக்கு காரணம். வேண்டுமென்றே சிலர் செய்யும் நடவடிக்கையால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்தடையை சீரமைக்க ரோந்து வாகனம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்வெட்டு பிரச்னை அறவே நீக்கப்படும்." என்றார். `நமக்கு எதிரானவர்கள் ஒன்று சேருகிறார்கள்.' - விஜய் விஜய் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில், ``வாகை சூடும் வரலாறு திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நச்சு கலாச்சாரத்தை சுக்குநூறாக உடைத்துள்ளோம். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனை அளிக்கிறது. கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டனர். 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம். நமக்கு எதிரானவர்கள் ஒன்று சேருகிறார்கள். ஒரு குடும்பம் முக்கியமில்ல என்று சொல்லக்கூடிய ஆட்சி எங்களுடையது. பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம். மக்கள் பணி செய்தவர்களுக்கு மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாது தான்." என்றார், அதுவெறும் ரீல்தான் ரியல் இல்ல -முதல்வர் விஜய் முதல்வர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்து முடிந்த நிலையில், இன்று முதல்வர் விஜய் பதிலுரை வழங்குகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும், சபா நாயகருக்கும், எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி எனப் பேசத் தொடங்கிய முதல்வர் விஜய், நான் நேரடியாக ஷூட்டிங்கிலிருந்து நேராக முதல்வர் ஆனதாக நினைச்சிட்டு இருக்காங்க. அவங்க மொழியிலேயே சொல்வதாக இருந்தால் அது வெறும் ரீல் தான் ரியல் இல்ல. சாதரண நடிகராக என் வாழ்க்கை தொடங்கியது. ஆனால் என் வளர்ச்சிக்கு மக்களின் அன்புதான் காரணம். முதல்வரின் பதில்கள் இன்று! முதல்வர் விஜய் சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு, மின்சாரப் பிரச்னை எனப் பல்வேறு கேள்விகளை முதல்வரை நோக்கி வீசியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு இன்றையக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




