சென்னை, தமிழக முதல்-அமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே. பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன். பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடித்த முதல் திரைப்படம் என்பதால். படத்தின் தொடக்கத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்" என்ற சிறப்பு டைட்டில் கார்டு இடம்பெற்றது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் திரையரங்குகளில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் OneLastDance என்ற ஹேஷ்டேக் வைரலாகி, ரசிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது, ஜனநாயகன் என்னவொரு பிரியாவிடைத் திரைப்படம். இதன் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்தேன். ரசிகர்கள் கொண்டாடும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். விஜய் அண்ணா, இத்தனை ஆண்டுகளுக்கும் நன்றி.'காதலுக்கு மரியாதை' படத்திலிருந்தே நான் உங்கள் ரசிகனாகிவிட்டேன். என் சிறுவயதுப் பருவத்தின் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருந்தீர்கள்.உங்களை மிகவும் மிஸ் செய்வேன். என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/i-have-been-a-fan-of-yours-since-the-movie-kadhalukku-mariyadhai-says-indian-cricketer-expressing-deep-admiration




