சென்னை, சவுகார் ஜானகி மறைவு திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (வயது 94) இன்று மதியம் (ஆக. 21) காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை சவுகார் ஜானகி நேற்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் சவுகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2(1-ம் தேதி) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு முதல்-அமைச்சர் விஜய், திரை உலகினர், அரசியல் பிரபலங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சவுகார் ஜானகி மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் நடிகை திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரோடு இணைந்து “ஒளி விளக்கு” திரைப்படத்தில் அவர் நடித்தது என்றும் நினைவுகூரத்தக்கது. பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 படங்களில் நடித்து, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janakis-demise-is-an-irreparable-loss-to-the-film-industry-edappadi-palaniswami



