நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் 8 நாட்களில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’ தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கை கதை மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கீடு ரசிகர்களின் வரவேற்புகளை தொடர்ந்து ‘மண்டாடி’ படத்துக்கு உலகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படத்தின் வசூல் இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 8 நாள்களில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. Reaches Yet Another Milestone! Grosses ₹80+ Crores Worldwide! The Reign Continues! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sooris-mandaadi-film-collects-rs-80-crores-in-8-days




