வேலூர், பேரணாம்பட்டு வனசரகம் மோர்தானா காப்புக்காட்டில் சுற்றித்திரிந்து வரும் ஒற்றை ஆண் யானை கடந்த 23-ந்தேதி பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான குட்டையில் தமிழக எல்லையில் போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சோலார் கண்காணிப்பு கேமராவை பிடுங்கி சேதப்படுத்தியதுடன், விவசாய நிலங்களில் பயிர்களையும், கல்கம்பங்களையும் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி கிராமம் ஆத்துபாய் என்கிற இடத்தில் கங்காதுரை (58) என்பவரின் நிலத்தில் புகுந்து அங்கிருந்த வீட்டின் கூரையை பிடுங்கி எறிந்து, வீட்டிலிருந்த நெல், அரிசி, தீவன தவிடுகள், வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு காவலுக்கு படுத்திருந்த கங்காதுரை தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார். விரட்டியது இதேபோன்று அருகில் உள்ள பத்மநாபன் என்பவரின் நிலத்தில் புகுந்து வேர்க்கடலை செடிகள், வக்கீல் வாசுகி பாண்டியன் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிரை மிதித்து நாசம் செய்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வனவர்கள் இளையராஜா, கார்த்தி, வனகாப்பாளர்கள் அரவிந்தன், ஞானசேகரன், கபிலன், வனகாவலர் திவாகரன் ஆகியோர் சென்று தென்னை மட்டைகளை எரித்தும், தீப்பந்தங்கள் காட்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டினர். அப்போது திடீரென கோபமடைந்த யானை நகராமல் தும்பிக்கையை உயர்த்தியவாறு வனத்துறையினரை ஓட, ஓட துரத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு பின்னர் அங்கிருந்து சென்ற ஒற்றை யானை பத்தலப்பல்லி போலீஸ் சோதனைச்சாவடி அருகிலுள்ள பாலய்யா (65) என்பவருடைய நிலத்தில் புகுந்து அங்கிருந்த மாட்டு தீவனத்தை ருசித்து சேதப்படுத்தியது. இதை பார்த்த பாலய்யாவும் அவரது மனைவியும் பம்பு செட்டுக்குள் ஓடி தப்பி னர். இது குறித்து தகவலறிந்த வனச்சரகர் மோகனவேல் தலைமையில் வன ஊழியர்கள் கிராமமக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து சுமார் 4 கி.மீ தூரம் வரை தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ள தபால்சாவடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மதம் பிடிப்பு ஒற்றையானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒற்றையானைக்கு காதின் ஓரத்தில் திரவம் போன்று வழிவதால் மதம் பிடிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே உயிர் சேதத்தை தவிர்க்க உடனடியாக கும்கி யானையை வரவழைத்து, ஒற்றை யானையை வனப்பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-wild-elephant-runs-amok-damaging-agricultural-crops




