சென்னை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீட்மறுதேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர். நீட் மறு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 715 மதிப்பெண்களும், ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் 715 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released




