சென்னை சென்னையில் தொடர் மழையால் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. தமிழகத்தின் வட கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. 11 விமானங்கள் இதன்படி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. விசாகப்பட்டினம், கொழும்பு, ஐதராபாத், மைசூரு, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் தொடர் மழையால், தெளிவற்ற வானிலையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தபடி இருக்கின்றன. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகளும், அவர்களுடைய உறவினர்களும் பரிதவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-11-flights-circle-in-skies-over-chennai




