சென்னை, சென்னையில் போதைப்பொருள் வழக்கில் முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் பறிமுதல் சென்னை அயனாவரத்தை சேர்ந்த சாய்தீபக் (வயது 25), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போதைப்பொருள் பதுக்கி விற்ற வழக்கில் திரு.வி.க. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சரின் உறவினர் கைது விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த துளசிராமிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, 'ஜில்லு' கணேசுக்கு விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துளசிராம் மற்றும் 'ஜில்லு' கணேசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று ஓட்டேரியில் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த 'ஜில்லு' கணேஷ்(33) என்பவரை கைது செய்தனர். இவர், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் உறவினர் என கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள துளசிராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-relative-arrested-in-drug-case



