கண்ணாடி எல்லா நிறங்களையும் பிரதிபலிப்பதால், அதற்கென்று தனியாக ஒரு நிறம் இல்லை என்று பலரும் நினைப்பார்கள். சிலர் கண்ணாடியின் நிறம் வெள்ளி அல்லது வெள்ளை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் கண்ணாடிக்கு மிகச் சிறிய பச்சை நிறச் சாயல் உள்ளது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்கா கிளாஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் பின்புறத்தில் ஒளியை பிரதிபலிக்கும் உலோகப் பூச்சு அமைக்கப்படுகிறது. ஒரு கச்சிதமான கண்ணாடி அனைத்து நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலித்தால், அது வெள்ளை நிறமாகவே தோன்றும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் அனைத்து அலைநீளங்களையும் ஒரே அளவில் பிரதிபலிப்பதில்லை. குறிப்பாக பச்சை நிற ஒளியை மற்ற சில நிறங்களை விட சற்றே அதிகமாக பிரதிபலிக்கும் தன்மை கண்ணாடிக்கு உள்ளது. இதன் காரணமாகவே கண்ணாடியின் பிரதிபலிப்பில் லேசான பச்சை நிறச் சாயலைக் காண முடியும். இந்த நிற வேறுபாடு மிகவும் நுணுக்கமானது என்பதால், சாதாரணமாக கண்ணாடியைப் பார்க்கும்போது நம் கண்களுக்கு அது தெரியாது. அதனால்தான் கண்ணாடி வெள்ளி நிறத்தில் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது. இந்த பச்சை நிறச் சாயலை வீட்டிலேயே எளிதாக கவனிக்கலாம். இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிரெதிராக வைத்து பாருங்கள். கண்ணாடிகளில் தொடர்ந்து உருவாகும் முடிவில்லாத பிம்பங்களை கவனித்தால், தொலைவில் செல்லச் செல்ல அவை சற்றே பச்சை நிறத்துடன் இருண்டு காணப்படுவதைப் பார்க்கலாம். ஒளி கண்ணாடிகளுக்கு இடையே பலமுறை பிரதிபலிக்கும்போது, ஒவ்வொரு பிரதிபலிப்பிலும் நிறங்களின் பிரதிபலிப்பு விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் சேர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால் தொலைதூர பிம்பங்களில் பச்சை நிறச் சாயல் தெளிவாகத் தெரிகிறது. எனவே, கண்ணாடியின் நிறம் வெள்ளை அல்லது வெள்ளி என்று மட்டும் சொல்வதைவிட, மிகவும் லேசான பச்சை நிறச் சாயல் கொண்டது என்று கூறுவது துல்லியமானது. அடுத்த முறை கண்ணாடியில் உங்களைப் பார்க்கும்போது, அதன் பின்னால் இருக்கும் இந்த சுவாரஸ்யமான இயற்பியல் ரகசியத்தையும் நினைத்துப் பாருங்கள்! தினமும் 3 பேரீச்சம்பழம், 5 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/science-behind-the-true-color-of-mirrors




