கேரள மாநில முதல்வர் வி.டி.சதீசன் செங்கன்னூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சில தினங்களுக்குமுன் பேசும்போது தாய்மார்களின் சமையல் கைபக்குவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். "தாய்மார்கள் தங்களின் சமையல் கலை மற்றும் சுவையை தங்களது மக்களுக்கும் (பிள்ளைகளுக்கும்), மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று அவர் பேசியிருந்தார். சமையல் என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை இல்லை என்றும், முதல்வரின் இந்த பேச்சு பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்றும், இதில் பெண் எதிர்ப்புக் கருத்து இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வி.டி.சதீசன் கூறுகையில், "தாய்மார்கள் சமையல் குறிப்புகளை பிள்ளைகளுக்கும் மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் என்ன பெண் எதிர்ப்பு இருக்கிறது? 'பிள்ளைகள்' என்றால் பெண் பிள்ளைகளை மட்டும்தான் குறிக்குமா? விமர்சிப்பதற்காக மட்டுமே மைக்ரோஸ்கோப் வைத்து ஆராயக் கூடாது. இந்த அளவுக்கு தரம் தாழக்கூடாது. வி.டி.சதீசன் என் அம்மா இறந்து 27 ஆண்டுகள் ஆனபோதிலும், அவர் பரிமாறிய உணவின் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது. அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். என்னை விமர்சிக்க வேண்டும் என்றால் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றை ஊதிப்பெருக்கினால், அப்படி பேசுபவர்களின் நம்பகத்தன்மை போய்விடும்" என்றார். நிகழ்ச்சியில் பேசிய வி.டி.சதீசன் மேலும் வக்ஃப் வாரிய பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் கூறிய வி.டி.சதீசன், "வக்ஃப் வாரிய நியமனப் பிரச்சனையை முந்தைய இடதுசாரி அரசுதான் மோசமாக கையாண்டது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முந்தைய வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி புதிய சட்டம் வருவதற்கு முன்பாகவே மாநில வக்ஃப் வாரியத்தை மறுசீரமைத்திருந்தால், பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக முந்தைய அரசு இந்த நியமனத்தைத் திட்டமிட்டு தாமதப்படுத்தியது" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/vd-satheesantalks-speech-about-cooking-and-women




