சென்னை, வங்கி மேலாளரை மு.க.அழகிரி மகள் தாக்கிய வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளரை தாக்கிய கயல்விழி சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த பாரத ஸ்டேட் வங்கி வாடகை விவகாரம் தொடர்பாக, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்குடன் ஏற்பட்ட தகராறில், அவரது கன்னத்தில் கயல்விழி அறைந்தார். இது தொடர்பான, சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி கைது செய்யப்பட்ட கயல்விழி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தள்ளிவைப்பு இந்த நிலையில், வங்கி மேலாளரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, காவல் துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. வங்கி மேலாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதால்தான் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கயல்விழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், திட்டியதை மறைத்து வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளதாக கயல்விழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கயல்விழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-bank-manager-attacked-by-mk-alagiri-daughter-hearing-postponed-to-16th




