திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை தற்போது 500-ஐ தாண்டி இருக்கிறது. Nepal Flood 1500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். இந்தப் பேரிடரில் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கின்றனர். வெள்ளப்பெருக்கை அடுத்து மீட்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தி இருந்தது. 7,250 போலீஸார், 4,200 ராணுவத்தினர், 1,845 ஆயுதப்படை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். Nepal Flood: 500-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட தவெக அமைச்சர்கள் இந்நிலையில் தற்காலிகமாக மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. சீனா மற்றும் நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான ஏரி உடைந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Nepal Flood இந்த வெள்ளத்தால் உருவாகியுள்ள ஒரு பெரிய இயற்கை தடுப்பு ஏரி, அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடையக்கூடும் என்று சீன அதிகாரிகள் நேற்று (ஆக. 28) எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/environment/disasters/nepal-flood-rescuers-halt-operations-as-lake-overflows-in-disaster-zone




