சென்னை, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. மீண்டும் மனு இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான திமுகவின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 3ம் தேதி ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markkandeyan-files-bail-plea-again-hearing-on-3rd




