புதுடெல்லி, சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியை பெறுகிறார்கள். அந்தவகையில் கடந்த மாதம் 7-ந்தேதி இந்த தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் 292 மையங்களில் நடந்த இந்த தேர்வில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 909 ஆண்கள், 64 ஆயிரத்து 78-பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 701 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. 59ஆயிரம் பேர் தோல்வி இதில் ஆண்களில் 73 ஆயிரத்து 45 பேர், பெண்களில் 42 ஆயிரத்து 757 பேர். திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 59 ஆயிரத்து 876 பேர் (ஆண்கள்-37,849, பெண்கள்- 22,022, திருநங்கைகள்-5) தோல்வியை தழுவினர். முறைகேட்டில் ஈடுபட்ட 20 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தமட்டில் 2,469 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 581 பேர் தோல்வி அடைந்தனர். அடுத்த தேர்வு நவம்பர் 29-ந்தேதி நடைபெறும் என்றும், இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தொடங்கும் என்றும் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/all-india-bar-council-exam-results-59-thousand-people-failed




