Articolo completo
ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார்த்தை நடந்தது. லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. இந்த நிலையில் தான், தற்போது அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கக் குழுவிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமை தாங்கினார். ஈரான் குழுவிற்கு தலைவர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆவார். இவருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் சென்றிருந்தார். இந்த இரு குழுக்களுக்கு மத்தியஸ்தராக பாகிஸ்தான் திகழ்ந்தது. காலிபாஃப் "பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" - பாக்., எச்சரிக்கை இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், ஈரான், பாகிஸ்தான் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய புள்ளிகள்... > இந்த 'லூசெர்ன் ஏரி உச்சிமாநாடு' மிகவும் சுமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெற்றது. > இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை அரசியல் ரீதியாகக் கண்காணிப்பதற்காக ஒரு 'உயர்மட்டக் குழுவை' அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. > அடுத்த 60 நாள்களுக்குள் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு ரோட்மேப்பை இந்த உயர்மட்டக் குழு ஏற்கும் > ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்யும் நோக்கில்... தேவையற்ற அசம்பாவிதங்களையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் விதமாக ஒரு தொடர்புப் பாதையும் உருவாக்கப்பட்டுள்ளது. > லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய... பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்புக்கும், லெபனான் குடியரசுக்கும் இடையே மத்தியஸ்தர்களின் உதவியோடு ஒரு 'மோதல் தவிர்ப்புப் பிரிவு' ஒன்றை உருவாக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்'ஈரான் போர் முடியக் கூடாது' நெதன்யாகு பக்கா பிளான்; கடும் கோபத்தில் ட்ரம்ப் - இஸ்ரேல் நகர்வு பின்னணி > அனைத்துப் பிரச்னைகள் குறித்தான இந்தத் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களிலும் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் தொடரும். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரு செயல், பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்... "ஈரான், லெபனானில் தங்களால் அதிகப் பணம் கொடுத்து இயக்கப்படும் தங்களது இயக்கங்களை, உடனடியாக வம்புகளைத் தூண்டுவதை நிறுத்தச் செய்ய வேண்டும். அவர்கள் இதைச் செய்யாவிட்டால், கடந்த வாரம் நாம் ஈரானைத் தாக்கியதை விடவும்... இன்னும் மிகக் கொடூரமாக அவர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்துவோம்!!!" என்று பதிவிட்டார். மேலும், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், "ஹார்முஸை நீங்கள் மூடினால், உங்களுடைய நாடு இருக்காது" போன்று பேசியிருந்தார் ட்ரம்ப். அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானுக்கு எதிரான பேச்சுகளையும், பதிவையும் வெளியிட்டுக் கொண்டிருக்க, ஸ்விட்சர்லாந்தில் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. ட்ரம்பின் இந்தச் செயல்கள் குறித்த தகவல் கிடைத்ததுமே, ஈரான் குழு புகைப்படத்திற்கு நிற்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர். அவர்கள் கிளம்பினாலும், இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும்... அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்தப் பேச்சுவார்த்தையை இன்னும் கடினமாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். Accenture Q3 Results: இந்திய பங்குச்சந்தை சரிவிற்கு காரணம்! அப்படி அது என்னதான் சொல்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto



