திருச்சி, திருவனந்தபுரம் தாம்பரம் இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06110) வருகிற 23, 30 மற்றும் அடுத்த மாதம் 7, 14, 21, 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாராந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06109) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service



