சென்னை, முதல்-அமைச்சர் சுறா படத்துல மீனவனா நடிச்சா மட்டும் போதாது.மீனவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என மத்திய இணை மந்திரி எல். முருகன் கூறியுள்ளார். மீனவர்கள் வாழ்வாதாரமே கடலில்தான் இருக்கிறது. மீனவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.முதல்-அமைச்சர் விஜய், மீனவராக சுறா படத்தில் நடித்தார். மீனவராக நடித்தால் மட்டும் போதாது. மீனவர்களின் உண்மையான வலியை புரிந்தவராக இருக்க வேண்டும் கடலை விட்டால் மீனவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அப்படியான மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள புதிய தலைமைச் செயலக அறிவிப்பை பட்டினப்பாக்கத்தில் இருந்து கைவிட வேண்டும். சென்னையில் எவ்வளவோ இடம் இருக்கிறது. அந்த இடங்களை பார்த்து கட்டிக்கொள்ளலாம். நவோதயா பள்ளிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-should-understand-the-pain-of-fishermen-l-murugan




