எம்.ஆர்.கேவுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் ``விவசாயிகள் கடந்த ஆட்சியில் சுகமாக இருந்ததை போல ஒரு திரைக்கதையை முன்னாள் அமைச்சர் பேசுகிறார். 309 கோடிக்கு நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பேன் என்றீர்களே. அதெல்லாம் எங்கே? விவசாயிகள் பற்றி பேசும் போதும் நெற் பயிருக்குள் கான்க்ரீட் போட்டு நடந்தாரே. அந்த விவசாயியை பற்றி பேச மறந்துவிட்டீர்கள். நீங்கள் சொல்கிற கதையெல்லாம் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது. சாக்கை கரையான் தின்றுவிட்டது என்பதைப் போல இருக்கிறது." எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: ``அமைச்சர் பேசும்போதுதான் தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று தெரிகிறது. உண்மையா பொய்யா என்றே தெரியாமல் டெக்னிக்காக பேசுகிறார்." ரமேஷ்: ``10 நிமிடத்திற்கு முன் அண்ணனிடம்தான் கற்றுக்கொண்டேன்" (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடம்.) (முதல்வர் ரசித்து சிரிக்கிறார்.) 21,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு 10000 கோடி ரூபாய்தான் தள்ளுபடி! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``1996 இல் கலைஞர் 7000 கோடி கடனை விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் 19600 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம். தவெக அரசு 21,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு 10000 கோடி ரூபாய்தான் தள்ளுபடி செய்திருக்கிறது." என்றார், அமைச்சர் ஆனந்த் vs எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``மாற்றம்.மாற்றம் என்று சொன்னார்கள். வேளாண் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. திமுக பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எங்களை பார்த்து பேப்பர் படிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்.நாங்கள் ஆட்சியில் இருந்த போது காலை 8 மணி வரைக்கும் அவ்வளவு டென்ஶனாக இருக்கும். பேப்பரில் மக்கள் பிரச்னைகளை பார்த்துவிட்டு அதிகாரிகள் மூலம் முதல்வர் எங்களை தொடர்புகொண்டு என்னவென்று கேட்பார். அதனால் 5 ஆண்டுகளும் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்களே. (தவெகவினரை நோக்கி.) அமைச்சர் ஆனந்த்: ``சின்ன வாய்க்கால் பிரச்னை என்றாலும் அது சரியாகிவிட்டதா என உடனே போன் போட்டு கேட்கக் கூடிய முதல்வர் இவர். உங்களுக்காகவாது 5 ஆண்டுகள்தான் டென்ஷன். எனக்கு தினந்தினம் டென்ஷன்." (நகைச்சுவையாக.) எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்: ``நீங்கள் பிஸி ஆனந்த்தான்." ``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய் ``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். அரசின் நிதிநிலைமை சரியில்லையெனினும் விவசாயிகளுடன் நிற்க விரும்புகிறோம். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம். அந்த வகையில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு - 2850 ரூபாயும் பொது ரக நெல்லுக்கு - 2600 ரூபாயும் கரும்புக்கு டன்னுக்கு - 4000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்." - முதல்வர் விஜய் செல்போன் பயன்படுத்தாதீங்க! - எச்சரித்த சபாநாயகர் ஐ.யூ.எம்.எல் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தில் பேசுகையில் மொபைல் போனை பார்த்து பேசினார். அவர் பேசி முடித்தவுடன், 'அவைக்குள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என விதி இருக்கிறது. அடுத்த முறை அதை பின்பற்றுங்கள்' என சபாநாயகர் எச்சரித்தார். வன்னிஅரசு - சபாநாயகர் உரையாடல் வன்னிஅரசு: `கன்னட தேசிய இனமக்கள் தங்களுக்கென ஒரு கொடியை அடையாளமாக வைத்து பொதுவெளியில் பயன்படுத்துகின்றனர்.' சபாநாயகர்: `நிறைய நல்ல விஷயங்களை பேசிவிட்டீர்கள்.போதும்.' வன்னிஅரசு: `மேதகு பிரபாகரன் அவர்களே இதை தடுக்கலாமா.' சபாநாயகர்: `தீர்மானத்துக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுங்கள்.' வன்னிஅரசு: `தமிழ்த் தேசியத்துக்கு எதிரான யாவருக்கும் பாரதிதாசனின் 'பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு.' என்பதையே கூற விரும்புகிறேன்.' அமைச்சர் வன்னிஅரசு பேச்சு "தமிழ்நாடு, தமிழர் என்கிற அடையாளத்தை தொடர்ந்து விதைத்து வருகிற அரசியல்தான் இன்னமும் தமிழகத்தில் நீடித்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள பண்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில், தமிழரின் பண்பாடான தமிழ்த்தாய் வாழ்த்தை பொது இடங்களில் முதலில் பாட வேண்டும் என்கிற தீர்மானத்தை வரவேற்கிறோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம். ஒரே நாடு ஒரே மொழி என தேசிய இனத்தின் அடையாளத்தை மட்டுப்படுத்துவதற்கு எதிரான வரலாற்று தீர்மானம் இது". வன்னியரசு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் "1991 இல் அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டுமென முடிவெடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாதான்". ஜே.சி.டி.பிரபாகர் எடப்பாடி பழனிசாமி பேச்சு இன்றைய கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 'தமிழ்தாய் வாழ்த்து' குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது. "தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை காக்க அதிமுக எப்போதும் போராடியிருக்கிறது. அண்ணாவும், எம்.ஜி.ஆரும், அம்மாவும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைகழகத்தை உருவாக்கினார். தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மா அறிவித்தார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. அது தமிழுக்கு வழங்கும் மரியாதை. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறில்லை. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழர் என்பதிலும் அதே அளவுக்கு பெருமை கொள்வோம். அதற்காக இந்த அரசின் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது". எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று. இன்றைய கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துகொள்ளுங்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/live-events-of-today-tamilnadu-assembly-day




