கோவை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பெயர் பலகை சேதம் கோவை, வடகோவை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வரும் ரெயில் நிலைய பணிகளின் போது, பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் நோக்கில் பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தில் தேர்வு செய்து, அதில் 17 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சில பிரிவினைவாத சக்திகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சீர்குலைக்க முயல்வது தமிழக மக்களின் நலனுக்கே எதிரானது. சட்டவிரோத வன்முறை பொதுவாகவே மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரெயில்வே நிலையங்களில் இந்தி, உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்கள் இடம்பெறுவது நீண்டகால நடைமுறையாகும். ஆனால் இதனை "இந்தி திணிப்பு" என தவறாக சித்தரித்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது சட்டவிரோத வன்முறையாகும். இது போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மீதும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-damage-to-hindi-nameplate-at-coimbatore-railway-station




