நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதேபோல், சென்னையில் தமிழக முதல் அமைச்சர் விஜய் தேசியக்கொடி ஏற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த முறையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிக்ளை கவுரவிக்கும் விதமாக அவர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் சுதந்திர தின நாளில் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாடு முழுவதும் ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேரும், வீரதீர செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்து 604 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: 1.ஜெ.விஜய் ஆனந்த்-கூடுதல் எஸ்பி 2.கே.ராமச்சந்திரன்-கூடுதல் எஸ்பி 3.எஸ்.குமார்-உதவி கமாண்டண்ட் உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கம் 1.மாலதி-இன்ஸ்பெக்டர். 2. பாஸ்கர்- சப் இன்ஸ்பெக்டர் 3.சிவசங்கர்- ஏஎஸ்பி 4.சோமசுந்தரம்- ஏஎஸ்பி 5.கோவிந்தராஜூ- ஏஎஸ்பி 6. சண்முகம்- டிஎஸ்பி 7. பத்தருன்னிசா பேகம்- இன்ஸ்பெக்டர் 8.மதிமாறன்- இன்ஸ்பெக்டர் 9.சரஸ்வதி- இன்ஸ்பெக்டர் 10. மாரியப்பன்- இன்ஸ்பெக்டர் 11.லெட்சுமி-இன்ஸ்பெக்டர் 12.ஜெயா இளவரசி- இன்ஸ்பெக்டர் 13.கோபால்-இன்ஸ்பெக்டர் 14.மணிமாறன்- உதனி கமாண்டன்ட் 15.லட்சுமி- இன்ஸ்பெக்டர் 16.செந்தில்குமார்- சப் இன்ஸ்பெக்டர் 17.சதுரகிரி- சப் இன்ஸ்பெக்டர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/presidents-medal-for-meritorious-service-announced-for-three-tamil-nadu-police-officers




