ஆஷா போஸ்லேவின் திரை பங்களிப்பு, இசை பயணம், அவரது பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நினைவு மியூசிக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்குகிறார். இதில் ஷாருக்கான், சல்மான்கானைத் தொடர்ந்து ரஜினியும் இணைந்துள்ளார். பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே(92) உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரலில் காலமானார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஷா போஸ்லேவின் திரை பங்களிப்பு, இசை பயணம், அவரது பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நினைவு மியூசிக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்குகிறார். ‘ஆஷா பாரெவர்’ என்ற தலைப்பில் உருவாகும் அந்த வீடியோவில் உச்ச நடிகர்கள் இடம் பெறுகின்றனர். ஆஷா போஸ்லே 1943-ல் தனது இசை பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பிரபலமான செண்பகமே. செண்பகமே, சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், மீரா படத்தில் ஓ பட்டர்பிளை, சேதுபதி ஐபிஎஸ், நேருக்கு நேர், புதுப்பாட்டு உள்ளிட்ட படங்களிலும் பாடலை பாடியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான்- ஆஷா போஸ்லே கூட்டணி ஏ.ஆர்.ரகுமானுக்கும் ஆஷா போஸ்லேவுக்கும் இடையிலான இசைப் பயணம் மிகவும் சிறப்பானது. இருவரும் இணைந்து பல்வேறு இந்தி பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழிலும் இந்த கூட்டணி ரசிகர்களுக்கு மறக்க முடியாத சில பாடல்களை கொடுத்துள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலா வெண்ணிலா’ பாடலை ஆஷா போஸ்லே பாடியிருந்தார். ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்’ பாடலிலும் ஆஷா போஸ்லேவின் குரல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலில் அவருடன் சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருந்தார். இதுவரை நடிகர்கள் ஷாருக்கான், கமல்ஹாசன், சல்மான் கான்,பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது புதிதாக ரஜினிகாந்த் இந்த மியூசிக் வீடியோவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆஷா போஸ்லே அவர்களின் மகத்தான கலைப் பயணத்தைக் கொண்டாடும் நிகழ்வில் எங்களுடன் இணைந்தமைக்காக ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். லட்சக்கணக்கானோரால் நேசிக்கப்படும் ஒரு ஜாம்பவான், மற்றொரு ஜாம்பவானைக் கௌரவிப்பது உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்வாகும்” என குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘கொஞ்ச நேரம்’ பாடலை ஆஷா போஸ்லே, மதுபாலகிருஷ்ணனுடன் இணைந்து பாடியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து அடுத்தடுத்து தனது மியூசிக் வீடியோவில் பிரபலங்களை இணைந்து வருவதால் பாடலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த வீடியோவின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. முழுப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. A very special thank you to for joining us in celebrating the extraordinary legacy of Asha Bhosle ji. To have a legend loved by millions honour another legend is truly special. — A.R.Rahman (@arrahman) August 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajinikanth-joins-singer-asha-bhosles-special-tribute-music-video




