வாழைப்பழம் ஏன் நேராக இல்லாமல் வளைந்து இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது சாதாரணமாக நடந்த மாற்றமல்ல. இதற்கு பின்னால் மிகவும் சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது. பலரும் நினைப்பது போல வாழைப்பழம் ஆரம்பத்திலிருந்தே வளைந்து வளராது. முதலில் அது நேராகவே வளரத் தொடங்குகிறது. பின்னர்தான் அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுக்கு அறிவியலில் "நெகட்டிவ் ஜியோட்ரோபிசம்" (Negative Geotropism) என்று பெயர். அதாவது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக தாவரத்தின் ஒரு பகுதி வளர முயற்சிப்பதே இதன் பொருள். வாழைப்பழங்கள் ஒரு பெரிய குலையாக வளரும்போது, அதன் எடை காரணமாக அவை இயற்கையாகவே கீழ்நோக்கித் தொங்குகின்றன. இது புவியீர்ப்பு விசையின் இயல்பான விளைவு. ஆனால் வாழைப்பழங்கள் சூரிய ஒளியை நோக்கி வளர விரும்புகின்றன. அதனால், கீழ்நோக்கி இழுக்கும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக, மேல்நோக்கி வளைந்து சூரிய ஒளியை அடைய முயற்சிக்கின்றன. இந்த இரு விசைகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் இயற்கையான இழுபறியின் விளைவாகவே வாழைப்பழம் மெதுவாக மேல்நோக்கி வளைந்து, அனைவரும் அறிந்த அந்த அழகான வளைந்த வடிவத்தைப் பெறுகிறது. வாழைத் தாவரங்கள் முதலில் அடர்ந்த காடுகளில் வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு மரங்களின் இடைவெளி வழியாகக் கிடைக்கும் குறைந்த அளவிலான சூரிய ஒளியைப் பெறுவதற்காக, அவை மேல்நோக்கி வளரும் தன்மையை உருவாக்கிக் கொண்டன. உலகில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் வளைந்த வடிவில் இருப்பதில்லை. சில வகை வாழைப்பழங்கள் ஒப்பீட்டளவில் நேராகவும் காணப்படுகின்றன. ஆனால் நாம் அதிகம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழங்கள் பெரும்பாலும் சூரிய ஒளியை நோக்கி வளர்ந்ததால் வளைந்த வடிவத்தைப் பெறுகின்றன. எனவே, வாழைப்பழத்தின் வளைந்த வடிவம் ஒரு குறைபாடு அல்ல; அது இயற்கையின் அற்புதமான தகவமைப்பு. புவியீர்ப்பு விசையையும் சூரிய ஒளியையும் சமநிலைப்படுத்தி வளர்ந்ததற்கான அழகான சான்றுதான் நாம் தினமும் சாப்பிடும் வளைந்த வாழைப்பழம். சர்க்கரை நோயால் ஞாபக மறதி ஏற்படுமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/do-you-know-why-bananas-are-curved-there-is-a-fascinating-scientific-reason-behind-it




