ராய்ப்பூர், தலைநகர் டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூருக்கு இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 37 பயணிகள், 4 விமானக்குழுவினர் என மொத்தம் 41 பேர் பயணித்தனர். டயர் வெடிப்பு இந்நிலையில், விமானம் பிலாஸ்பூர் விமான நிலையத்திற்கு தரையிறங்க முற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் டயர் வெடித்து சிதறியது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், சாதுரியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tyre-burst-during-landing-no-injuries-to-41-passengers




