தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது 'கே.ஜி.எப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இந்த நிலையில், நேற்று எதிர்பாராத விதமாகத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட படக்குழு இதுதொடர்பாக ஜூனியர் என்.டி.ஆரின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் ஜே. மதுசூதன் ராவ் மற்றும் டாக்டர் ஆர்.ஏ. பூர்ணசந்திர தேஜஸ்வி தலைமையிலான மருத்துவக் குழு பரிசோதனை செய்ததையடுத்து, முழுமையான குணமடைவதற்காக 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பதற்றப்பட தேவையில்லை' மேலும், ரசிகர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஜூனியர் என்.டி.ஆரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது குழு விளக்கம் அளித்துள்ளது. உடல்நலம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தேவையான நேரத்தில் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் சில வாரங்களுக்கு படப்பிடிப்பில் இருந்து ஓய்வெடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மற்றும் ஓய்வில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/injured-jr-ntr-doctors-advise-8-weeks-of-rest




