நம்ம ஆளுங்களுக்குக் கையில் ஒரு 50 லட்சம் கிடைச்சா உடனே ஓடிப்போய் பேங்க்ல 'பிக்ஸட் டெபாசிட்' (FD) போடுறதுதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். "அப்பாடா, மாசம் மாசம் வட்டி வரும், ஜாலியா வாழலாம்"னு நினைப்போம். 10 வருஷத்துக்கு முன்னாடி இது ஓகே. ஆனா இப்போ? பேங்க் வட்டி வெறும் 6% - 7% தான். 50 லட்சத்துக்கு மாசம் 25 ஆயிரம் வட்டி வரலாம். ஆனா, இதுல ஒரு பெரிய 'ஆப்பு' ஒளிஞ்சிருக்கு! இன்னைக்கு 25,000 ரூபால குடும்பம் நடத்தலாம். ஆனா, இன்னும் 10 வருஷம் கழிச்சு? காய்கறி, மெடிக்கல் செலவுனு எல்லாமே டபுள் ஆயிடும். பணவீக்கம் (Inflation) உங்கள விரட்டும்! அப்போ 25,000 பத்தாதுனு, அசல்ல கைய வைக்க ஆரம்பிப்பீங்க. பொன்முட்டை போடுற வாத்த நீங்களே அறுக்குற கதை ஆயிடும். சரி, இதுக்கு என்னதான் வழி? ஃபைனான்ஸ் குருக்கள் சொல்ற ஒரே தீர்வு - 'SWP' (Systematic Withdrawal Plan). உங்களோட 50 லட்சத்த ஒரு நல்ல 'ஹைப்ரிட்' மியூச்சுவல் ஃபண்ட்ல (Hybrid Mutual Fund) முதலீடு பண்றது. இதுல ஆபத்து ரொம்ப கம்மி, வளர்ச்சியும் சூப்பரா இருக்கும். இப்போ கணக்கைப் பார்ப்போம்! நிதி நிபுணர்கள் சொல்ற '5% Withdrawal Rule' படி, வருஷத்துக்கு 6% மட்டும் வித்ட்ரா பண்ணா, 50 லட்சத்துக்கு வருஷத்துக்கு 3 லட்சம் கிடைக்கும். அதாவது, மாசம் கரெக்ட்டா 25,000 ரூபாய் உங்க பாக்கெட்டுக்கு வரும்! இதுல என்ன மேஜிக்னா. உங்க ஃபண்ட் வருஷத்துக்கு 10% வளருதுனு வைப்போம். அதுல 6% பணத்தை (மாசம் 25,000) நீங்க செலவுக்கு எடுத்துக்கிறீங்க. மீதி 4% லாபம் உங்க அசல் 50 லட்சத்தோட சேர்ந்து கூடிட்டே போகும். 10 வருஷம் கழிச்சு பார்த்தா, நீங்க மாசம் 25,000 எடுத்துட்டே இருந்தும், உங்க அசல் 50 லட்சம் குறையாம 60 லட்சமா வளர்ந்து நிக்கும்! அப்புறம் நீங்க மாச வருமானத்தையும் 30 ஆயிரமா உயர்த்திக்கலாம். பேங்க் FD தேங்கி நிக்கிற குட்டை நீர் மாதிரி; வத்திப்போயிடும். ஆனா SWP ஒரு சுரங்க ஊற்று மாதிரி; தண்ணியும் கிடைக்கும், ஊற்றும் வற்றாது! ஓய்வுக்காலத்துல யார்கிட்டயும் கையேந்தாம கெத்தா வாழ, இந்த SWP சூப்பர் ஃபார்முலா! SWP இதைப்பற்றி இன்னும் முழுசா தெரிஞ்சுக்கணுமா? உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! SWP மூலம் உங்களுக்கு இரண்டாவது வருமானத்தை உருவாக்க வேண்டுமா? வரும் புதன் மாலை 7 மணிக்கு நடைபெறும் '₹50 லட்சம், ₹25000 மாத வருமானம் பெற்றுத் தருமா?' ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கோங்க! SWP பற்றி முழுசா தெரிஞ்சுக்கோங்க! இப்போதே முன்பதிவு செய்ய (குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன) - முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/how-to-get-25000-rupees-monthly-pension-from-50-lakhs-corpus




