சேலம், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெறும். கடந்த மாதம் 1-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நீர்மின் நிலையங்களில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று 7-ந் தேதி இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி 110 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்குமானால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-power-generation-at-mettur-hydroelectric-power-station




