பாங்காக், தாய்லாந்து நாட்டின் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கின. அப்போது, அப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர் திடீரென தன் கையிலிருந்த துப்பாக்கியால் பள்ளியில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், பயந்துபோன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வகுப்பறைகளை விட்டு அலறியடித்து கொண்டு நாலாபுறமும் ஓடினர். இந்த சம்பவத்தில், பள்ளியின் ஊழியர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் தெரிவித்தது. 12 வயது சிறுமி இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமி இன்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. பள்ளியில் இருந்தவர்கள் 5 பேர், மாணவரின் தாத்தா, பாட்டி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தலை, மார்பு என முக்கிய பாகங்களில் தாக்கப்பட்டதில் பலியாகி உள்ளனர். இதுதவிர, 14 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 5 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/thailand-school-shooting-death-toll-rises-to-8-five-day-holiday-announced




