நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மற்றும் வலைதளங்களில் நடிகர், நடிகைகள் அவதூறாக குறித்து பேசுபவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், செப்டம்பர் 27-ஆம் தேதியான இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மற்றும் வலைதளங்களில் நடிகர், நடிகைகள் அவதூறாக குறித்து பேசுபவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகை லதாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும், நாடகத் துறையைச் சேர்ந்த சிறந்த 5 கலைஞர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு - கருணாஸ் துணைத் தலைவர் கருணாஸ், நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள் கட்டிடத்தை திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். “தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது வாய்மொழியாக அழைப்பு விடுத்திருந்தோம். அவரும் கண்டிப்பாக வருகிறேன் என உறுதியளித்துள்ளார். விரைவில் திறப்பு விழா தேதியை முடிவு செய்து முதலமைச்சருடன் கலந்துபேசி அதிகாரப்பூர்வமாக அழைப்போம்” என்றார். அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது சட்ட நடவடிக்கை வலைதளங்களில் நடிகர்கள் குறித்துப் தவறான செய்திகளை பரப்புபவர்கள் குறித்து எச்சரித்த கருணாஸ், “பணத்திற்காக பிரபலங்களை இழிவாக பேசுவது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும். இதுவரை தவறான தகவல்களை பரப்பிய 9 யூடியூபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்வோம்” என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-is-the-inauguration-of-the-nadigar-sangam-building-karunas-gives-an-important-update




