நீலகிரி, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சர்வதேச புகழ்பெற்ற முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அறுசுவை உணவு விருந்து முகாமில் உள்ள ரகு, பொம்மி உள்ளிட்ட வளர்ப்பு யானைகள் அனைத்தும் ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுத்தமாக குளிப்பாட்டப்பட்டன. பின்னர், யானைகள் அனைத்தும் கம்பீரமாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, யானைகள் தின சிறப்பு விருந்தாக பச்சரிசிப் பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி, ஆப்பிள் மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் தயார் செய்யப்பட்டன. பாகன்கள் மற்றும் வனத்துறையினர் இந்த அறுசுவை உணவுகளை யானைகளுக்கு ஆசையோடு ஊட்டி மகிழ்ந்தனர். தங்களுக்கு பிடித்தமான பழங்களை யானைகளும் மிகவும் உற்சாகத்துடன் தும்பிக்கையால் வாங்கி ருசித்து சாப்பிட்டன. சுற்றுலா பயணிகள் வாழ்த்து இந்த கொண்டாட்டத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை முகாமில் குவிந்திருந்தனர். வளர்ப்பு யானைகள் வரிசையாக நின்று பழங்களை சாப்பிடுவதை கண்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.மேலும், அங்கு திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒருசேர கைகளை தட்டி, 'ஹேப்பி எலிபன்ட் டே என உற்சாகக் குரல் எழுப்பி யானைகளுக்குத் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை முகாம் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/world-elephant-day-celebrations-special-feast-at-mudhumalai-camp




