சென்னை, வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை காலை, மாலை என 2 வேளை குறைந்தது. ஒரு கிராம் 14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படிம் கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-for-the-second-consecutive-day-what-is-the-situation-today




