கோலாப்பூர், மராட்டிய மாநிலத்தில், இரு மாணவிகளின் கல்விக்காக அடர்ந்த காட்டு பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் மலை ஏறி சென்று பாடம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. 2 மாணவிகள் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன்பவ்டா தாலுகாவில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமம் காவல்டெக் தங்கர்வாடா. இந்த கிராமத்தில் வெறும் மூன்று வீடுகள் மட்டுமே உள்ளன. இங்கு மின்சார வசதியோ அல்லது முறையான சாலை வசதியோ கிடையாது. இந்த கிராமத்தை சேர்ந்த 8 வயது மற்றும் 5 வயதுடைய இரு சகோதரிகள் அங்குள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வருகின்றனர். மலை ஏறும் ஆசிரியர் இந்த மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட கூடாது என்பதற்காக, ஜீவன் மிதாரி என்ற அரசு பள்ளி ஆசிரியர் தினமும் தார் சாலை இல்லாத, கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று பாடம் கற்பித்து வருகிறார். பள்ளிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதால், அவர் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டு வழியே மலை ஏறி செல்கிறார். மீண்டும் மாலையில் 5 கிலோமீட்டர் நடந்து திரும்புகிறார். வனவிலங்குகள் நடமாட்டம் அவர் கடந்து செல்லும் அடர்ந்த காட்டுப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு நாய்கள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தன்னுயிரையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவிகளின் எதிர்காலத்திற்காக அவர் தினமும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஆசிரியர் தினத்தை ஒட்டி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழும் ஜீவன் மிதாரியின் இந்த அசாத்திய அர்ப்பணிப்பை பாராட்டி மக்கள் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/teacher-climbs-hilltop-to-teach-two-girls



