பெங்களூரு, பெங்களூரு கொரகுண்டே பாளையாவில் இருந்து யஷ்வந்தபுரம் செல்லும் சாலையில் கடந்த 4-ந் தேதி அதிகாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் சென்றனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தபடி ஓட் டிச் சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு யஷ்வந்தபுரத்தில் இருந்து துமகூரு ரோட்டை நோக்கி சென்றது. ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடி சென்றது. ஆனால் சைரன் சத்தத்துக்கு மதிப்பளிக்காமலும், ஆம்புலன்சுக்கு வழிவிடாமலும் 2 மோட்டார் சைக்கிள்களிலும் சென்ற வாலிபர்கள் சாகசம் செய்தபடியே சென்ற வண்ணம் இருந்தனர். இதனை ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நோயாளியை அழைத்துச் கொண்டு சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சாகசத்தில் ஈடுபட்டது கொலை முயற்சிக்கு சமமானது என்றும், வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/youths-on-motorcycles-dare-to-run-without-giving-way-to-ambulance-viral-video




