அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதற்கிடையே கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமனெயின் உடல் அடக்கத்துக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாளை தொடங்குகின்றன. இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வுகளை 6 நாட்கள் நடத்த ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.இதையடுத்து இறுதிச்சடங்கிற்காக அயத்துல்லா அலி காமனெயின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மத வழிபாட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட இடத்துக்கு சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் இமாம் கமேனி ஹுசைனியா வளாகத்திற்கு அருகில் இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/ayatollah-ali-khameneis-funeral-in-iran-begins-tomorrow-son-mojtabas-participation-is-in-doubt




