சேலம், சேலம், ஈரோடு வழியாக கோவை- தன்பாத் இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. புதிய அம்ரித் பாரத் ரெயில் கோவை போத்தனூர்- தன்பாத் இடையே அம்ரித் பாரத் ரெயில் இயக்கப் பட்டு வருகிறது. இதற்கிடையே கோவை- தன்பாத் இடையே அம்ரித் பாரத் புதிய ரெயில் இயக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. அதாவது இந்த ரெயில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களை இணைக்கும் வகையிலும், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாகவும் இயக்கப்படுகிறது. தன்பாத்- கோவை அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22363) தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் மாலை 4.10 மணிக்கு புறப்படும். விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணி குண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திங்கட்கிழமை பிற்பகல் 3.12 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் 3.12 மணிக்கு வந்து 3.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சேவை இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. 22 பெட்டிகள் மறுமார்க்கத்தில் (22364) கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு வழி யாக காலை 10.17 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் 10.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணி குண்டா உள்ளிட்ட நிலையங்கள் வழியாக வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தன்பாத் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சேவை வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் மொத்தம் 39 முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த அம்ரித் பாரத் ரெயிலில் 8 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 11 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் என மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெறவுள்ளன. வடமாநிலங்களுக்கு நேரடி இணைப்பு கோவை-தன்பாத் இடையே புதிய ரெயில் சேவை தொடங்கப்படுவதன் மூலம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு வடமாநிலங்களுக்கான பயண வசதி மேம்படும். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீண்டதூரம் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக அமையும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரி வித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-amrit-bharat-train-between-coimbatore-and-dhanbad




