நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, சாலை மறியல் உள்ளிட்ட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து வருகின்றனர். முதல்வர் விஜய் மாணவர்கள் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், "எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம். ஜனநாயகம் வேண்டும்! போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா? வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்? பதில் இருக்கிறாதா?" என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" - தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/admk-condemns-tvk-government-for-arresting-students-in-tn




