தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான், அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், உலகின் மிகவும் முக்கிய கடல்வழி வர்த்தக பாதையான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற கச்சா எண்ணெய், சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ராணுவ கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. 10வது நாளாக தாக்குதல் இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/america-attack-iran-2




