கள்ளக்குறிச்சி, மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இதயா மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். அவருடன், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவி, வாணாபுரம் பகுதியை சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மற்றும் சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் 2 மாணவிகள், கடலூர் பகுதியை சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. தோழிகள் கொடுமை இந்த நிலையில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர். மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். போலீசார் விசாரணை மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/female-engineering-student-tortured-over-ghost-possession-claim




