Articolo completo
'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த அதிரடி ரெடியாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டில் சசிகுமாரின் நடிப்பில் வெளியான படம் 'அயோத்தி'. இந்த மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் படம் முன்னிறுத்தியது. பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்த 'அயோத்தி'யின் பட இயக்குநர் மந்திரமூர்த்தியின் அடுத்த பட வேலைகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தது. இந்நிலையில்தான் புதுபட வேலைகள் ஜரூராகத் தொடங்கியிருக்கிறது. சசிகுமாருடன்.. மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கும் குடும்பத்துக்கு ஆதரவாக மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் 'அயோத்தி' பேசியிருந்தது. அதனுடன் சட்டச் சிக்கல்கள், அதனால் அவதியுறும் எளிய மக்கள், சிக்கலான விதிமுறைகள் இருந்தாலும் அதையும் கடந்து துளிர்க்கும் மனிதம் என உணர்வுபூர்வமான காட்சிகள் படம் நெடுகவே நிரம்பியிருந்தன. இந்தப் படத்தில்தான் ப்ரீத்தி அஸ்ரானி அறிமுகமானார். இந்தப் படத்தின் மூன்றாவது வார வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அன்று படத்தின் ஹீரோவான சசிகுமார், மந்திரமூர்த்திக்கு தங்கசங்கிலி அணிவித்து பாராட்டியிருந்தார். அயோத்தி படத்தில்... நீண்ட காலமாகவே தன் அடுத்த பட வேலைகளில் இருந்தார் மந்திர மூர்த்தி. இப்போது தன் அடுத்த பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோ. நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். முக்கியமான ரோலில் புதுமுகம் நடிகை ஒருவரின் கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள். இதுவும் ஒரு உண்மை கதை என்றும் தகவல். விஜய் ஆண்டனியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ரம்யா நம்பீசன். இதற்கு முன் 'தமிழரசன்', 'ரத்தம்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறர். மாதேஷ், மந்திரமூர்த்தி 'டாணாக்காரன்', 'அயோத்தி', 'சிறை' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், மீண்டும் மந்திரமூர்த்தியுடன் இணைந்திருக்கிறார். படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். நேற்று மதுரையில் படப்பிடிப்பு தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகிறது. Nambikkai Awards: `அந்த மனிதர்தான் எல்லாத்துக்கும் காரணம்...' - கலங்கிய `அயோத்தி' மந்திரமூர்த்தி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto


