சென்னை, ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். படகு விபத்து இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனாலும், இந்த சம்பவத்தில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. ஆழ்ந்த இரங்கல் இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/15-indians-killed-in-vietnam-boat-accident-edappadi-palaniswami-condoles




