கோப்ஜி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக ஜனாதிபதி முர்மு நேற்று மால்டோவா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி மயா சந்து, துணை பிரதமர் மைஹை பாப்சொய் உள்பட பலரை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். வடக்கு மாசிடோனியா பயணம் இந்நிலையில், மால்டோவா பயணத்தை நிறைவு செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணத்தின் 2வது நாடாக இன்று வடக்கு மாசிடோனியா நாட்டிற்கு சென்றுள்ளார். வடக்கு மாசிடோனியாவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார். ஜனாதிபதி முர்மு வடக்கு மாசிடோனியா ஜனாதிபதி சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/president-murmu-arrives-in-north-macedonia




